பைக்கில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்ற புள்ளிங்கோஸ்-வீடியோ

0 7354
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம், செயினை பறித்துவிட்டு மர்மநபர்கள் அதிவேகமாக தப்பி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம், செயினை பறித்துவிட்டு மர்மநபர்கள் அதிவேகமாக தப்பி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

நிலக்கோட்டையை சேர்ந்த செல்வம்-செல்வி தம்பதியினர் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, சித்தையன் கோட்டை அருகே அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், செல்வியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு, அதிவேகமாக தப்பிச்சென்றனர். இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் பின் தொடர்ந்து சென்று வீடியோ எடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments