செப்.12 ல் நடக்கும் நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

0 4321

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தகுதித்தேர்வை தள்ளிவைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு வரும் 12 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள மாணவர்கள், அதே காலகட்டத்தில் நடக்கும் வேறு தகுதித் தேர்வுகளிலும் பங்கேற்க வசதியாக, நீட் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என மனுக்கள் தாக்கலாயின.

அவற்றை விசாரித்த நீதிபதிகள், சில மாணவர்களின் வசதிக்காக தேர்வை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்தது. எல்லா தகுதித் தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், எந்த தேர்வு வேண்டும் என்பதை மாணவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments