100 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போட்ட இமாச்சலப் பிரதேசம் : பிரதமர் மோடி பாராட்டு

0 2571

குதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுத் தடுப்பூசி இயக்கத்தில் முன்னணி மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச மருத்துவத் துறைப் பணியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையாடினார்.சிக்கிம், தத்ரா நாகர்ஹவேலி ஆகியவற்றிலும் நூறு விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் பேசிய இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், நவம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments