உலகின் மிகப் பெரிய ட்ரைசெராடோப்ஸ் டைனோசரின் எலும்புக் கூடு விற்பனைக்கு..!

0 2195

உலகின் மிகப் பெரிய ட்ரைசெராடோப்ஸ் என்ற டைனோசரின் எலும்புக் கூடு விற்பனைக்கு வருகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த பினோச் எட் ஜிகுல்லா என்ற ஏல விற்பனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலாஸ்கா முதல் மெக்ஸிகோ வரை இந்த டைனோசர் இனங்கள் வாழ்ந்தாகத் தெரிவித்துள்ளது. இதன் தலை எலும்பு கிட்டத்தட்ட இரண்டரை மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டது.

அதில் ஒரு மீட்டர் நீளமுள்ள இரு கொம்புகள் உள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரைசெராடோப்ஸ் எலும்புக் கூடுகளில் இதுவே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக் கூடு ஒன்று புள்ளி 4 மில்லியன் டாலர் அளவிற்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக பினோச் எட் ஜிகுல்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments