முதன்முதலாக தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஏர்ஸ்டிரிப்... ஒத்திகைக்காக தரையிறக்கப்பட உள்ள விமானத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி பயணிப்பார்கள் என அறிவிப்பு

0 3090

முதன்முதலாக தேசிய நெடுஞ்சாலையில் ஒத்திகைக்காக தரையிறக்கப்பட உள்ள விமானப்படை விமானத்தில், மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்கரியும் பயணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் விமானங்கள் தரையிறங்கும் ஏர்ஸ்டிரிப் ஆக பயன்படுத்தப்பட உள்ளது. அதில் விமானத்தை தரையிறக்கி நடைபெறும் ஒத்திகையில் பங்கேற்ற பின்னர் அதை அமைச்சர்கள் இருவரும் கூட்டாக பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்கள் அவசரகாலங்களில் அவசரமாக தரையிறங்க ஏதுவாக, 28 தேசிய நெடுஞ்சாலைகளில் இது போன்ற ஏர்ஸ்டிரிப்புகளை ஏற்படுத்த இயலும் என கண்டறியப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments