கடும் போராட்டத்திற்குப் பிறகு பஞ்ஷிரை பிடித்தனர் தாலிபன்கள்?

0 2897

ப்கானிஸ்தானில் பஞ்ஷிரின் சில முக்கிய பகுதிகளை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கனின்  பஞ்ஷிர் மாகாணம் மட்டும், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ் தலைமையிலான தாலிபன் எதிர்ப்பு கிளர்ச்சி குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அதை பிடிக்க ஆயிரக்கணக்கான தாலிபன்கள் படையெடுத்து சென்றனர்.

அப்போது நடந்த போரில் 600 க்கும் மேற்பட்ட தாலிபன்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அங்கு தொடர்ந்து நடந்த பலத்த போரில் கிளர்ச்சி படையினருக்கு பெரும் சேதம்  ஏற்பட்டு அவர்களின் முக்கிய கமாண்டர்கள்  பலர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்ருல்லா சலேஹ் தங்கியிருந்த வீடு குண்டு வீச்சில் தகர்ந்தாலும் அவர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments