ஜிகா, நிபா வைரஸ் அச்சுறுத்தலால் கேரளாவுடனான பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுமா..? - அமைச்சர் விளக்கம்

0 2919

ஜிகா, நிபா வைரஸ் பாதிப்புகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள கேரளாவில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், அம்மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்து தடை என்பது சரியானதாக இருக்காது என கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் பொறியியல் கல்லூரியில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 12 ம் தேதி ஒரே நாளில் 10000 தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என்றும், இதன் மூலம் 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தேவைப்பட்டால் அனைத்து பள்ளிகளிலும் மாதிரிகள் சேகரிப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments