பூஸ்டர் டோஸ் செலுத்த WHO அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் - அமைச்சர்

0 2174

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதைச் செயல்படுத்தும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பூஸ்டர் டோஸ் தொடர்பான தொடக்கப் பணிகள் தொடங்கவில்லை எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments