பயணியின் சட்டைப் பையில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு ஓடிய திருடன் : சினிமா பாணியில் விரட்டி பிடித்த பெண் காவலர்

0 3175

சென்னை சென்ட்ரலில் பயணியிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு குவிகிறது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலரான இந்திராணி, பணி முடித்துவிட்டு புளியந்தோப்பிலுள்ள வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது, திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வந்த பேருந்தில், தாமோதரன் என்ற பயணியின் சட்டைப் பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு திருடன் ஓடியுள்ளான்.

தாமோதரனின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருடனை பிடிக்க முயன்ற நிலையில், உடனடியாக காவலர் இந்திராணி பேருந்தில் இருந்து இறங்கி ஓடிச் சென்று அந்த திருடனை பிடித்து பூக்கடை போலீசில் ஒப்படைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments