கர்நாடகாவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு

0 4103

கர்நாடகாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, அங்கு முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே மாணவர்கள் அமரவைக்கப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments