தாய்லாந்து வனப்பகுதியில் காணாமல் போன இங்கிலாந்து முதியவர்... 3 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்பு

0 3339

தாய்லாந்து வனப்பகுதியில் மாயமான இங்கிலாந்தைச் சேர்ந்த முதியவர் 3 நாட்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டார்.

72 வயதான லியோனார்டு பெர்ரி வெல்லர் என்பவர், கோன் கீன் என்ற இடத்தில் உள்ள தனது நண்பர்களைச் சந்திக்கச் சென்றார். வனப்பகுதி குறுக்கிட்டதால் வழிதவறி காணாமல் போனார். விஷப் பாம்புகளும், கரடிகளும் அதிகம் இருக்கும் அந்த வனப்பகுதியில் லியோனார்டைத் தேடும் பணி நடந்தது.

3 நாட்களுக்குப் பின் அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். காட்டுக்குள் இருந்த 3 நாட்களும் வைகோல் போன்ற புல்லைப் பயன்படுத்தி மழை நீரை பருகி உயிர் பிழைத்ததாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments