தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் முதலமைச்சர் படம் இல்லை

0 2279

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் நடப்பாண்டில் முதலமைச்சர் படம் இடம்பெறவில்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதில் கடந்த 2007 ஆண்டு முதல் முதலமைச்சர் படத்துடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கிய விருதில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் முதலமைச்சர் படம் இல்லாமல், அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments