கனமழையால் வெள்ளம் சூழ்ந்த வீடுகள்... தினமும் படகில் பள்ளிக்குச் சென்றுவரும் 11ம் வகுப்பு மாணவி

0 2475

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பெய்த கன மழையால் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்து வெளியுலகுடன் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தியா சஹானி என்ற 11 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குச் செல்ல படகை ஓட்டிச் செல்கிறார். இங்குள்ள ரப்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சிறுமியின் வீடு முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆயினும் படிப்பைக் கைவிடாமல் சந்தியா பஹராம்புர் வரை படகில் சென்று படித்து வருகிறார்.

கொரோனாவால் பல மாதங்கள் தனது படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் வகுப்புகளை இழக்க மனம் இல்லை என்று கூறுகிறார் சந்தியா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments