மன்னிச்சு..! மன்னிச்சு..! சவால் விட்ட ரவுடி படுத்தே விட்டானய்யா..! போலீஸ் தேடுவதால் யூடர்ன்

0 16034
மன்னிச்சு..! மன்னிச்சு..! சவால் விட்ட ரவுடி படுத்தே விட்டானய்யா..! போலீஸ் தேடுவதால் யூடர்ன்

காக்கி சட்டையை கழட்டிட்டு வாண்ணே சண்டை போடுவோம் என்று, போலீஸ் ஏட்டை சவால் விட்டு அழைத்த ரவுடியை, காவல்துறையினர் தேடிவரும் நிலையில் மன்னிப்புக்கேட்டு கதறிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.

மதுரை நகர் காவல்துறையில் தனிப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில். இவரை செல்போனில் வாண்டடாக அழைத்து பேசிய பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் , வேட்டையாடு விளையாடு கமல்ஹாசன் பாணியில் ஏட்டு ராஜேஷுக்கு சவால் விட்டு மிரட்டியுள்ளான்.

என் கை, கால்களை உடைக்க வேண்டும் என சொன்னயாமே. நீ எங்கே இருக்கேனு சொல்லு. நான் வாரேன். நீ காக்கி சட்டயை கழட்டி வச்சுட்டு ஆம்பளையா வாண்ணே. சண்டை போடுவோம். நான் வீரன். இன்னும் மூன்று நாளில் பீபிகுளத்தில ஒருவனை கொன்னுடுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என செல் போனில் ரவுடி ராஜேஷ் பேசிய அடாவடியான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது....


ரவுடியை ஏட்டு செந்தில்குமார் கண்டித்ததும், 'சரிண்ணே, மன்னிச்சுடு. என்னை சுட்டுக்கொல்லுங்க.... உயிரையே வெறுத்துவிட்டேன்' என்று டக்கென்று மிரட்டலில் இருந்து யூடர்ன் அடித்து மன்னிப்புக் கேட்டு மன்றாடிய ராஜேஷின் கதறல் ஆடியோவும் வெளியானது...

இந்த மிரட்டல் ஆடியோ தொடர்பாக ஏட்டு செந்திலிடம் விசாரித்த உயர் அதிகாரிகள் , அவனை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர். போலீசார் தீவிரமாக தேடிவரும் பந்தல்குடி ரவுடி ராஜேஷ் மீது, ஒரு கொலை, ஒரு கொள்ளை, ஒரு போக்சோ உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments