மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரின் காதலி நடிகை லீனா மரியம் பால் கைது.. டெல்லி போலீசார் நடவடிக்கை..!

0 4819

200 கோடி மோசடி வழக்கில் சிக்கியுள்ள மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும் நடிகையுமான லீனா மரியம்பால் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை லஞ்சம் கொடுத்து பெற்றுத் தருவதாக கூறி முறைகேடு செய்த வழக்கு உட்பட பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுகாஷ் சந்திரசேகர் மீதும் அவரது காதலி லீனா மரியம்பால் மீதும் 200 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை தனியாக மற்றொரு வழக்கை பதிவு செய்தது. 

அமலாக்கத்துறையின் விசாரணை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், டெல்லி போலீசார் பதிவு செய்த மோசடி வழக்கில் சந்திரசேகருக்கு உடந்தையாக அவரது காதலி லீனா மரியம்பாலும் ஈடுபட்டதாக முகாந்திரம் இருப்பதன் அடிப்படையில் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை இந்தியன் வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகாஷ் உடன் கைது செய்யபட்ட நடிகை லீனா மரியா பால், அடுத்தடுத்து பல்வேறு மோசடி வழக்குகளிலும் சுகாஷுக்கு  உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டார்.

காதலர் சுகாஷ் திகார் சிறையில் இருந்து வந்த நிலையில், பெங்களூருவில் அழகு நிலையம் நடத்தி வந்த லீனா மரியம்பால் சிறையிலிருந்து கொண்டே சுகாஸ் ஈடுபட்டுவரும் பல மோசடி திட்டங்களை வெளியிலிருந்து செயல்படுத்தி சம்மந்தப்பட்டவர்களிடம் பணத்தை வாங்கி வைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியாபாலிடம் டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்ததாக அமலாக்கத்துறை வழக்கிலும் லீனா மரியாபால் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments