ஒரே மகள் காதல் திருமணம்.. வாட்ஸ்அப்பில் திருமண போட்டோ.. மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்..!

0 16754

திருப்பூர் அருகே, ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய திருமண போட்டோவை பார்த்து மனமுடைந்த பெற்றோர் விஷமாத்திரையை உண்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொளையாம்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி - சுமதி தம்பதியின் மகள், கோவையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

எதிர்வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவையில் வைத்து அந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதாகக் கூறி, மணக்கோலத்திலுள்ள போட்டோவை தனது பெற்றோருக்கு அவர் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனைப் பார்த்து மனமுடைந்த பெற்றோர் முதலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்று, கயிறு எட்டாததால், தென்னை மரத்துக்கு வைத்திருந்த குருணை மாத்திரையை உண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments