போலீஸ் தோரணையில் பேசி நூதன முறையில் பணம் திருட்டு ; "டிப்டாப்"பாக உடையணிந்த ஆசாமிகளிடம் பணத்தைப் பறிகொடுத்த பரிதாபம்

0 2422

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பட்டப்பகலில் போலீஸ் எனக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒருவரை நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பூபாளன் என்பவர், திருமண அழைப்பிதழ்களை மொத்தமாக வாங்கி வந்து திண்டிவனத்திலுள்ள அச்சகங்களில் விற்பனை செய்து, பணம் வசூல் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

நேற்று திண்டிவத்தில் உள்ள சில அச்சகங்களில் வசூல் செய்த 55 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சென்னை செல்வதற்காக பேருந்து நிலையத்துக்கு நடந்து வந்துள்ளார். அப்போது டிப்டாப் உடையணிந்த ஆசாமிகள் இருவர் அவரை வழிமறித்து, “பையில் என்ன வைத்திருக்கிறாய், கஞ்சாவா ?” எனபோலீஸ் தோரணையில் பேசியவாறே அந்தப் பையை வாங்கி சோதனை செய்வது போல பாவனை செய்துள்ளனர்.

பூபாளனிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பியவர்கள், விநாடி நேரத்தில் பையிலிருந்த 55 ஆயிரம் ரூபாயை எடுத்து, மறைத்துக்கொண்டு அவரை அனுப்பி வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments