பஞ்ச்சீர் மாகாணத்தில் கடும்போர்..! தாலிபான் படையில் 600 பேர் பலி.. 1000 பேர் சிறைப்பட்டதாகத் தகவல்

0 3210

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்சீர் மாகாணத்தில் தாலிபான்களுக்கும் எதிர்ப்புப் படையினருக்கும் நிகழ்ந்த கடும்போரில், தாலிபான் படையினர் 600 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் உள்ளிட்ட பெரும்பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நாட்டின் வடகிழக்கில் உள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் தாலிபான்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அந்த மாகாணத்தைத் தாலிபான்கள் முற்றுகையிட்டுள்ளதால் கடும்போர் மூண்டது.

இந்தச் சண்டையில் தாலிபான் படையில் 600 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் சரணடைந்துள்ளதாகவும் எதிர்ப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பாகிம் தஸ்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சண்டையிடும் தாலிபான்களுக்கு மற்ற மாகாணங்களில் இருந்து உணவு உள்ளிட்ட இன்றியமையாத் தேவைப் பொருட்கள் கிடைப்பது தடைபட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் சாலைகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிக்கொண்டே செல்வதால் மெதுவாக முன்னேறிச் செல்வதாகத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments