பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழப்பு - 20 பேர் காயம்..!

0 6478

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தாலிபான் (Tehrik-e-Taliban Pakistan) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் நிகழ்த்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

குவெட்டா நகரில் (Quetta) இருந்து மஸ்தூங் (Mastung) நகர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடி நோக்கி வெடிகுண்டுகளுடன் பைக்கில் வந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினர் அமர்ந்திருந்த வாகனம் மீது மோதி வெடிக்கச் செய்தான். இதில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments