டோக்கியோவில் இருந்து தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

0 3371

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு, அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த முறை, ரியோ டி ஜெனிரோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள மாரியப்பன், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments