389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 15 ஆசிரியர்களுக்கு விருதை நேரில் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1980

ஆசிரியர் தினத்தை ஒட்டி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விருதுகளை வழங்குவதன் அடையாளமாக தலைமை செயலகத்தில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு இந்த விருதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments