திருடு போன ஆட்டை கண்டுபிடித்து தர கோரி, உயர்மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம்

0 3627

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திருடு போன ஆட்டை கண்டுபிடித்து தரக் கோரி போதை ஆசாமி ஒருவர் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோப்பம்பாளையம், கருப்பராயன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்,காவிலிபாளையம் செல்லும் சாலையோரத்தில் இருந்த 220 அடி உயரமுள்ள உயரழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறி நின்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் நம்பியூர் தீயணைப்பு துறையினர் சிவக்குமாரை கீழே இறங்கி வருமாறு கூறினர். அப்போது தான் ஆசையாய் வளர்த்த வெள்ளாட்டு கிடா திருடப்பட்டதால், போலீசார் எப்ஐஆர் பதிய வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிவக்குமார் தானாக கீழே இறங்கி வந்ததை அடுத்து, போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments