நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; வலைகள், ஜிபிஎஸ் கருவி ஆகியவை கொள்ளை

0 2029

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியதுடன் வலைகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

கோடியக்கரைக்குத் தென் கிழக்கே 12 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்தபோது அங்கு அதிவேகப் படகில் வந்த இலங்கைக் கடற் கொள்ளையர்கள், மீனவர்களைக் கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கியதுடன் வலைகள், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

தாக்குதலில் 3 பேர் காயமடைந்தால் மீனவர்கள் கரை திரும்பினர். கோடியக்கரை அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தட்சிணா மூர்த்தி என்பவரின் படகையும் சுற்றிவளைத்த கடற் கொள்ளையர்கள் வலைகளைப் பறித்துச் சென்றனர்.

இதேபோல் ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வலைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது, அதை எதிர்த்துக் கார்த்தி என்கிற மீனவர் சண்டையிட்டுக் காயமடைந்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேதாரண்யம் கடலோரக் குழுமக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments