ஆப்கானில் தலிபான்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் பஞ்ச்ஷீர் போராளி குழு ; 200 தலிபான்களை கொன்று குவிப்பு

0 8702

ஆப்கானில் எஞ்சியிருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்ற தலிபான்கள் கடும் யுத்தம் மேற்கொண்டுள்ள நிலையில், ஒரு மலையையே தகர்த்து 200 தலிபான்களை போராளி குழுவினர் கொன்றுள்ளனர்.

இதையடுத்து தலிபான் படைகள் தலைதெறிக்க பின்வாங்கி ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அகமது மசூத் மற்றும் அமேருல்லா சாலேஹ் தலைமையிலான போராளி குழுவினர், தலிபான்களுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றனர். தலிபான் நான்கு மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டதாக அறிவித்த நிலையில் தங்கள் எதிர்ப்புப் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதாகவும் தலிபானுக்கு கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் போராளி குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments