அமெரிக்காவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாயமான 5 மாலுமிகள் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 2367

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாயமான கடற்படையைச் சேர்ந்த 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் கப்பலுக்குச் சொந்தமான MH-60S என்ற ஹெலிகாப்டர் கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் பசிபிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 5 மாலுமிகள் மாயமாகினர். இந்நிலையில் காணாமல் போன 5 மாலுமிகளும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments