ஆந்திராவில் அரசு பேருந்தின் பின் சக்கர டயர்கள் கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி

0 3245

ஆந்திராவில்  பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின் சக்கர டயர்கள் இரண்டும் தனியாக கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகவரத்தில் இருந்து படகோட்டா நோக்கி அரசு பேருந்து ஒன்று சுமார் 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

மலைப்பாதையில் சென்ற பேருந்தின் பின்பக்க டயர்கள் இரண்டும் திடீரென தனியாக கழன்று வந்த நிலையில், சிறிது தூரம் சென்ற பேருந்து மண்ணில் சிக்கி நின்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் வேறு பேருந்தை வர வழைத்து பயணிகளை அழைத்து சென்றனர். axle இணைப்பு பழுதடைந்து இருந்ததால், டயர்கள் தனியாக கழன்றிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments