8 வயது சிறுவன் ஆட்டோ ஓட்டிய வீடியோ வைரல், கல்விச் செலவை ஏற்பதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதி -தெலுங்கு தேச கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ்

0 4200

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்குடுபல்லேவில் குடும்பத்தை காப்பற்ற ஆட்டோ ஓட்டி வந்த 8 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்பதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக தெலுங்கு தேச கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் அறிவித்துள்ளார்.

சிறுவன் ஆட்டோ ஓட்டும் வீடியோவை பார்த்து, தெலுங்கு தேச கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

கண் பார்வையற்ற பெற்றோர் மற்றும் சிறுவயது சகோதரர்களை காக்க சிறுவன் ஆட்டோ ஓட்டியதை அறிந்து, 50 ஆயிரம் ரூபாய் நிதி மற்றும், பிள்ளைகளின் படிப்புச் செலவு, ஆட்டோ வாங்க பெற்ற கடனை அடைக்க உதவுவதாக அறிவித்துள்ளார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments