ஏழை மாணவிக்கு ஓட்டப்பந்தயத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர்

0 3203

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏழை மாணவி ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு தேவையான உபகரணங்களை காவல் ஆய்வாளர் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து உதவி புரிந்துள்ளார்.

சாணார்பட்டி கிராமம் குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி திவ்யபிரியதர்ஷினி. மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதற்கான காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

அவரின் நிலை அறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தேவையான உபகரணங்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments