மேற்குவங்கத்தில் பாபானிபுர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல், மம்தா பானர்ஜி போட்டி

0 2899

மேற்குவங்கத்தில் வருகிற 30 ஆம் தேதி பாபானிபுர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். நாளை முதல் பிரச்சாரம் தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா போட்டியிட்ட தொகுதியில் அவர் பாஜக வேட்பாளரிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

மம்தா தலைமையிலானஅரசு அமைந்ததையடுத்து பாபானிபுர் தொகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரசின் அமைச்சர் ஷோவன்தேவ் மம்தா போட்டியிடும் விதத்தில் ராஜினாமா செய்தார். இத்தொகுதியைத் தவிர வங்காளத்தின் மேலும் 2 தொகுதிகள் மற்றும் ஒடிசாவில் ஒரு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments