ஆப்கானிஸ்தானில் தூதரகத்தைத் திறந்து வைத்திருக்க சீனா உறுதி

0 2243

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் தூதரகங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற பிற நாடுகள் பரிசீலிக்கும் வேளையில் சீனா மட்டும் காபூலில் தனது தூதரகத்தை திறந்து வைத்திருக்க உறுதி அளித்துள்ளது.

முல்லா அப்துல் கனி பராதர் தலைமையிலான குழு ஒன்று கடந்த ஜூலை மாதம் சீனாவின் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தியது. ஆப்கானின் முக்கியமான அரசியல் மற்றும் ராணுவ இயக்கம் என்று தாலிபனை அழைத்த சீனா, ஆப்கான் அரசு வீழ்ந்த பிறகு தாலிபனுக்கு முக்கியக் கூட்டாளியாக மாறியுள்ளது.

ஆப்கானுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கும் சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. புதிய தாலிபன் அரசு தீவிரவாத குழுக்கள் உடனான உறவை கைவிட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments