ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 2450

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்துகிறது.

எனவே, தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுகவினருடன், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், எம்எல்ஏ, எம்.பிக்கள் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments