ஜெர்மனி வாழ் பெண் அளித்த புகார் : நடிகர் ஆர்யா பெயர் சேர்ப்பு... நீக்கம்... விளக்கம்.!

0 5727

ஜெர்மனி வாழ் பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடிகர் ஆர்யா பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டதாகவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது அவரது பெயர் நீக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சைபர் குற்ற வழக்குகளை திறம்பட கையாண்ட போலீசாரை பாராட்டி மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுமதிகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடிகர் ஆர்யா வீடியோ கால் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதென அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறியுள்ள நிலையில், வழக்கறிஞரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments