மனைவிக்கு தெரியாமல் மச்சினிச்சியுடன் 2 -வது திருமணம் : கைக்கு காப்பு போட்ட போலீஸ்

0 3313

சென்னையில், மனைவிக்கு தெரியாமல் அவரது தங்கையை 2-வது திருமணம் செய்துகொண்ட கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் - ரம்யா தம்பதியினருக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரியான லோகநாயகிக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கணேஷ் பலமுறை தனது மனைவி ரம்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக ரம்யா கடந்த ஜூன் மாதம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திருவண்ணாமலையில் ஒரு கோயிலில் வைத்து லோகநாயகியை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு செல்போனை துண்டித்துள்ளார் கணேஷ்.

இதனையடுத்து மனைவி ரம்யா புகார் அளித்ததன் பேரில், கணேஷனை கீழ்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments