டெஸ்லாவின் 25,000 டாலர் விலையில் மின்சார கார்... 2023ல் அறிமுகம் என எலான் மஸ்க் தகவல்

0 3466

ஏற்கனவே அறிவித்த 25 ஆயிரம் டாலர் விலையிலான ஸ்டியரிங் வீல் இல்லாத மின்சார காரை வரும் 2023 ல்  அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் தமது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்லாவின் புதிய பாட்டரி செல்கள் மற்றும் பாட்டரி தயாரிப்பு முயற்சிகளின் விளைவாக, பாட்டரியின் செலவு 50 சதவிகிதம் வரை குறையும் என்பதால், இந்த குறைந்த விலைக்கு காரை விற்க உள்ளதாக எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஜிகாஃபேக்டரியில் உருவாக உள்ள இந்த ஹாட்ச்பேக் ரக கார்  அங்கிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments