இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் : பாராலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள தங்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

0 5137

டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன்  போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத், தங்கப் பதக்கத்தையும், மனோஜ் சர்க்கார்  வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இறுதிப் போட்டியில் பிரிட்டனின் டானியல் பெத்தலை 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரமோத் பகத் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் பாரலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.  வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜப்பானின் Daisuke Fujihara-வை 22-20,21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

பதக்கம் வென்ற இருவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments