விதிகளை மீறிய பணியால், அரசு மருத்துவமனை இடியும் அபாயம் - ஒப்பந்ததாரருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம்

0 4125
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடக்கும் விதிகளை மீறிய பணியால், அரசு மருத்துவமனை இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்ததாரருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடக்கும் விதிகளை மீறிய பணியால், அரசு மருத்துவமனை இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்ததாரருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் நகராட்சி அலுவலகம் அருகே தனியார் கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணிகளை முன்னாள் கவுன்சிலரும் கட்டிட ஒப்பந்ததாரருமான யோகேஷ் கண்ணன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.

அரசு மருத்துவமனை கட்டிடத்தை நெருக்கியவாறு பொக்லைன் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தால், மருத்துவமனை நடைபாதை மற்றும் ஆக்சிஜன் பிளான்ட் பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டன.

தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தது, மின்கம்பங்கள் சரிவு என அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன. சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments