மதுபோதையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு ; மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

0 2056
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

சென்னை கோயம்பேட்டில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சுங்கத்துறை பெண் துணை ஆணையரை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜில் வசிக்கு சர்மிளா, விமான நிலையத்தில் சுங்கத் துறை துணை ஆணையராகவும், அவரது கணவர் செல்வ முத்துக்குமரன் தனியார் மென்பொருள் நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர்.

நேற்று நள்ளிரவு வீட்டில் தம்பதி இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது உறவினர் திருமணத்திற்கு செல்வது தொடர்பாக வாக்குவாதம் முற்றி, கத்தியால் குத்தி சாகப்பபோவதாக சர்மிளா மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த செல்வ முத்துக்குமரன், கத்தியை பிடுங்கி சர்மிளாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த சர்மிளாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வடபழனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments