ராணி எலிசபெத் இறந்தால் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள்.... முதன் முறையாக கசிந்த ஆவணம்

0 3103

பிரிட்டன் ராணி எலிசபெத் இறந்தால் அதற்குப் பிறகு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆவணம் முதன் முறையாக வெளியே கசிந்துள்ளது.

ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ள  விரிவான திட்டம் குறித்த தகவல்கள் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் Politico என்னும் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. ராணி எலிசபெத்  இறந்த பிறகு அவரது உடல்  10 நாட்கள் கழித்து தகனம் செய்யப்படும் என்றும், தகனம் செய்யப்படுவதற்கு முன், அடுத்ததாக அரியணையில் ஏறப் போகும் இளவரசர் சார்லஸ்  பிரிட்டனில் நான்கு நாள் சுற்றுப் பயணம் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில்  மூன்று நாட்கள் வைக்கப்படும் ராணி எலிசபெத்தின் உடலைப் பார்க்க பெருந்திரளான மக்கள் லண்டனை நோக்கி படையெடுக்க வாய்ப்பிருப்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments