முன்னாள் ஆப்கன் அரசின் ஜி-மெயில் கணக்குகள் முடக்கம் - கூகுள் நிறுவனம்

0 2214
முன்னாள் ஆப்கன் அரசின் ஜி-மெயில் கணக்குகள் முடக்கப்பட்டன

ஆப்கனில் பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட முன்னாள் அரசு அமைச்சகங்களின் இமெயில் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவற்றை தாலிபன்கள் தவறாக கையாண்டு முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை திரட்டி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20 க்கும் மேற்பட்ட ஆப்கன் அமைச்சகங்கள் ஜி-மெயில் சேவையை பயன்படுத்தி வந்தன.

ஆப்கனை கைப்பற்றி உள்ள தாலிபன்கள் அவற்றில் இருந்து முன்னாள் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஒப்பந்த தாரர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த கூட்டாளி நிறுவனங்களின் தரவுகளை பெற்று விட வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக ஆப்கனில் அமெரிக்கர்கள் உருவாக்கிய டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, முக்கிய உளவுத் தகவல்களை திரட்ட தாலிபன்கள் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments