சிறார் இலக்கியத்துக்கான விருதுபெற்ற பாலபாரதிக்கு முதலமைச்சர் வாழ்த்து

0 1591
சிறார் இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற பாலபாரதிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறார் இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற பாலபாரதிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் பாலபாரதி, மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கிப் புதிய உயரங்களைத் தொடட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் பெற்ற மனீஷ் நர்வால், வெள்ளிப் பதக்கம் பெற்ற சிங்ராஜ் அதானா ஆகியோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் வீரர்களின் இந்தச் சிறப்பான வெற்றிகள் மேலும் பல திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments