பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் தான் மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டது என்பது தவறான கருத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4031

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறுவது தவறு என்றும், முன்பே அறிகுறிகள் இருந்த நிலையில் தற்போது தொற்று கண்டறியப்பட்டதாகவும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், அப்பகுதிகளில் 100 விழுக்காடு தடுப்பூசி போடுவதற்குக் கூடுதலாகத் தடுப்பு மருந்து வழங்கும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments