கொரோனா எதிரொலி ; கோவையில் 36 இடங்களில் வார இறுதி நாட்களில் கடைகள் இயங்கத் தடை

0 12633
கோவையில் 36 இடங்களில் வார இறுதி நாட்களில் கடைகள் இயங்கத் தடை

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராஸ் கட் சாலை, ஒப்பணக்கார வீதி, துடியலூர் சந்திப்பு, பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு, ராஜவீதி உள்ளிட்ட 36 இடங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments