பஞ்சுக்குச் சந்தை நுழைவுவரி நீக்கம் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2523
பஞ்சுக்குச் சந்தை நுழைவுவரி நீக்கம் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின்படி அறிவிப்பை வெளியிட்ட அவர், தமிழ்நாட்டில் ஆயிரத்து 570 நூற்பாலைகள் உள்ளதாகவும், இவற்றுக்குத் தேவையான பஞ்சில் 95 விழுக்காடு பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார்.

பஞ்சின் மீதான சந்தை நுழைவு வரியை நீக்குவதற்கான சட்டத் திருத்தத்தை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளதாக அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments