பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

0 2309

பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்புக்குக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான பெண் அதிகாரி, சமூகப் பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உளவியல் வல்லுநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி வைத்தல், அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத் தொடர்பு எண்களை எழுதி வைத்தல் ஆகியவற்றையும் விரைந்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments