ஜப்பான் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் 2 பதக்கங்கள்

0 3031

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கமும், மற்றொரு இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெள்ளியும் வென்றனர்.

இறுதிச் சுற்றில், மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகள் எடுத்து, புதிய பாராலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார். சிங்ராஜ் அதானா, 216.7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணீஷ் நர்வால் தங்கம் வென்றுள்ளது விளையாட்டுத் துறையில் சிறப்பான தருணம் என குறிப்பிட்டுள்ள பிரதமர், சிங்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments