16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

0 13619

புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு தண்டனை அளித்தவுடன் பி மேட்டு பட்டியைச் சேர்ந்த குற்றவாளி ரஞ்சித்குமார் கதறி அழுதார். திருச்சி சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments