சினிமா பாணியில் வர்த்தகத்தில் தொலைத்த பணத்தை முதலாளியின் நகையை விற்று ஈடுகட்ட நினைத்த ஊழியர்கள் கைது

0 1731
வர்த்தகத்தில் தொலைத்த பணத்தை முதலாளியின் நகையை விற்று ஈடுகட்ட முடிவு

வர்த்தகத்தில் தொலைத்த பணத்தை தன் முதலாளியின் நகைகளை களவாடி ஈடுகட்ட நினைத்த ஊழியர் உள்பட 2 பேரை கைது செய்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை நகை வியாபாரி ஷர்வான் குமார் கெலாட், தன் ஐதராபாத் வாடிக்கையாளர்களுக்கு நகைகள வழங்க குலாப் மாலியிடம் தங்கத்தை வழங்கி பஸ் ஏற்றி அனுப்பி உள்ளார். மறுநாள் தன்னிடம் இருந்த நகை திருடப்பட்டதாக மாலி தெரிவித்ததை அடுத்து கெலாட் ஐதாராபாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் தீவிர விசாரணையில மாலி தன் கூட்டாளி பிரவீன் குமாரை தான் ஏறிய அதே பேருந்தில் வரச்சொல்லி அவனிடம் நகைகளை கொடுத்துவிட்டு, தானே தூக்க மாத்திரையை எடுத்துக் கொண்டு மற்றவர் நகையை திருடியதாக நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதனிடையே பிரவீன் குமார் நகைகளை அடகு வைத்ததை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் கைது செய்து நகைகளை மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments