புறஊதா கதிர்கள் மூலம் ரயில் இருக்கைகளை சுத்தம் செய்யும் ரோபோ

0 1889
புறஊதா கதிர்கள் மூலம் ரயில் இருக்கைகளை சுத்தம் செய்யும் ரோபோ

ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள் மற்றும் கழிவறைகளில் மறைந்திருக்கும் கிருமிகளை ரோபோ ஒன்று புறஊதாக் கதிர்கள் மூலம் சுத்தம் செய்யும் வீடியோவை இந்தியன் ரயில்வே டெல்லிப் பிரிவு வெளியிட்டுள்ளது.

டெல்லி, லக்னோ இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணங்கள் மூலம் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக டெல்லி ரெயில்வே டிவிசன் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வரும் 6-ஆம் தேதி பிரயாக்ராஜ் ஜெய்ப்பூர் சிறப்பு ரயிலின் ஏசி பெட்டியிலும் இதை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments