தாலிபான்கள் அரசில் தலைவர் பதவி யாருக்கு?

0 1741
தாலிபான்கள் அரசில் தலைவர் பதவி யாருக்கு?

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இன்று அரசமைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் நட்புறவை விரும்புவதாகவும், சீனா முக்கிய கூட்டாளி என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி 29 நாட்களான நிலையில் அங்கு இன்னும் அரசமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஹைபத்துல்லா அகுன்ஸதா ஆப்கனின் மதத்தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் தாலிபான் அமைப்பின் துணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் அதிபராகவும், முல்லா முகமது உமரின் மகன் முகம்மது யாகூப் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்படுவார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த அரசு இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தலிபான் அரசு அமைக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்று தாலிபான் தலைவர்களில் ஒருவரான அனஸ் ஹக்கானி தெரிவித்துள்ளார். அதே நேரம் உளவுத்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பாகிஸ்தானுக்கு முன்னுரிமை கொடுக்கவும் தாலிபான்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனிடையே சீனா தங்களின் முக்கியப் பங்குதாரர் என்று குறிப்பிட்டுள்ள தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தானில் உள்ள செப்புச் சுரங்களில் சீனா முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதி உபகாரமாக சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதாகவும் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments