பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 1397
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவரின் பொதுச் சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள் அமைப்பதற்கு மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு, மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதனால் அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும், உரிமையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பணமாக்கல் என்னும் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள், அதனைச் சார்ந்து இயங்கும் சிறு, குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விலைமதிப்பற்ற அரசுச் சொத்துக்கள் ஒரு சில குழுக்கள் அல்லது பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கே பணமாக்குதல் நடவடிக்கை வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments